7

ஓரக் கண்ணால்...



ஓரக் கண்ணால்
பார்த்துக் கொண்டு
என்னைக் கடந்து
செல்லும் பொழுது
உன்னுடனே வந்துவிடுகிறது
என் மனது...

இனியும்
என்னைக் கடந்து
செல்லும் பொழுது
ஓரக் கண்ணால்
பார்த்தால்...
எந்தன் உடலில்
மீதம் இருக்கும்
உயிரும்
உன்னுடன் வந்துவிடும்...

இப்போது நீ
என்ன செய்யபோகிறாய்?
0

இப்படிக்கு பசுமை - 4



என்னை தொட்டுச்
செல்லும் போது,
எந்தன் குளிர்ச்சியை
களவாடிச் சென்றாய்...

போகும் வழியதனில்,
மனித உயிர்களுக்கு,
தானமாய் தந்தாய்...

அன்று...
எங்கு காணினும்,
பச்சை மிளிர்ந்தது.
இன்று...
வறட்சியே எஞ்சியுள்ளது.

இத்தருணத்தில்,
மனித உயிர்களுக்கென,
குளிர்ச்சியை கேட்டால்,
நான்
என்ன செய்வேன்?

இப்படிக்கு,
பசுமை
4

முத்தம்



வெளிச்சம் இல்லா,
இதழ்களுக்கு இடையில்,
சத்தம் மட்டுமே,
சக்கரவர்த்தி...
அங்கே,
அவளும் நானும்
மெழுகுவர்த்தி...
5

காதல் கடிதம்



உன் பார்வையால்,
எந்தன் வெட்கங்கள்...
உதிரக் கண்டேன்!

உன் தொடுகையால்,
எந்தன் நாணம்...
நொறுங்கக் கண்டேன்!

உன் சிரிப்பினில்,
எந்தன் மனம்...
சுருங்கக் கண்டேன்!

உன் அணைப்பினில்,
எந்தன் ஊணுடல்...
உருகக் கண்டேன்!

எந்தன் உயிரே...
நீ இல்லாத,
இடங்களில் எல்லாம்,
தனிமையில்,
வெறுமையை மட்டுமே,
நான் கண்டேன்.
வாடை தேடும் மலராய்,
உன் காதலி...
5

பூ முகம்



காந்தள் பூவின்,
இரு விரல்கள் பிரிந்து...
குவளைப் பூவில்,
மலர்ந்தது கண்டேன்...

மாலை கதிரவன்
மத்தியில் இருக்கும்,
காந்தள் மலராய்
நின் முகம் கண்டேன்...
தேன் ஊறா,
குவளை மலராய்,
நின் இதழ்கள் கண்டேன்...

பூவினுள் மலர்ந்த
முதற் பூவாய்
நின் முகம் கண்டேன்...

0

ஈன்றோர் வாழ்த்து



என்னை ஈன்றவள்
ஈய்ந்த உடலும்
ஈன்றவள் துணையான்
ஈய்ந்த உயிரும்
உரு கொண்டு
உள் மனதில்
நினைந்து நினைந்து
தேனாய் உருகி
பற்பல போற்றிகள்
ஈன்றோரை பாடுதாம்...
0

அனிச்சம்



தூரிகை கொண்டு தீட்டிய,
இருண்ட மேக வீதியில்,
புன்னகை பூக்கும் நிலவோ,
நின் குழல் ஏறிய,
வெண் நிறத்தில் தோய்ந்த,
நாணல் காணா அனிச்சம்?
0

என் அருகே நீ இருந்தால்...


எந்தன் அருகில்,
நீ இருந்தால்...
நான் பேசும்,
வார்த்தைகள் யாவும்,
கவிதைகளாம்...

என்னோடு,
நீ இருந்தால்...
நாம் வாழும்,
அழகிய வாழ்கை,
கவிதை புத்தகமாம்...
0

எந்தன் கண்ணில் உந்தன் அழகு...



உனக்கென்றே,
கண்ணாடிகள் பல இருந்தும்,
என் கண்களுக்குள்,
நீ விழுவதை மட்டும்,
பல காலம்
இரசித்து வந்தாய்...

பெண்ணே!
இவ்வாறு...
உன்னை நீயே
இரசித்து கொண்டால்...
நான்,
வேலையற்று போவேனே!
3

கடனாய் தருகிறேன்!


கண்களை கொஞ்சம்
கடனாய் தருகிறேன்!
உன்னை நீயே பாரடி...
அழகாய் என்னை,
அழகால் கொல்லும்,
இன்பங்களை உணர்த்தும்...

இதயத்தை கொஞ்சம்
கடனாய் தருகிறேன்!
உன்னை எண்ணிப் பாரடி...
நீ நாணும் வகையில்,
உன்னுடைய வருகையை,
கவிதையாய் படிக்கும்...

என்னை கொஞ்சம்
கடனாய் தருகிறேன்!
என்னை கொஞ்சம் பாரடி...
நீ கொஞ்சி விளையாட,
நீ விரும்பும் பொம்மையாய்,
நாணி நிற்கும்...