பெற்ற பலன்
பிறக்கும் குழந்தையின்,
உடலுக்கு உயிரையும்,
மனதிற்கு அன்பையும்,
நிரப்பித் தருகிறாய்!
சிறிது காலம்,
பிள்ளைக்கு உணவாக,
குருதியையும் தருகிறாய்!
நிரப்பித் தந்த,
அன்பை எல்லாம்,
உயிர்களிடம் வெளிப்படுத்தும்,
பண்பையும் தருகிறாய்!
ஒவ்வொரு நிலையிலும்,
ஒவ்வொரு செயலுக்கும்,
ஊன்றுகோலாய் இருந்து,
வாழ்க்கையில் வெற்றியையும்,
தேடித் தருகிறாய்!
பலன் ஏதும் வேண்டாது,
நீ செய்த செயல்களுக்கு,
நான்...
என்ன செய்ய போகிறேன்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 பின்னூட்டங்கள்:
சுமக்கத்தான் வேண்டும் சுமையென கருதாமல் காலமது முடிவு வரை.
அருமை...
கருத்துரையிடுக