காற்றோடு...


என்னை பார்க்கவே வந்துவிடும்,
உன்னுடைய வாரக் கடிதத்தையும்...
என்னுடைய நலமறிய அனுப்பப்படும்,
உன்னுடைய அலைபேசி குரலையும்...
எதிர்பார்த்து காத்திருந்த,
ஒவ்வொரு அழகான நொடியும்...
கல்லூரி விடுதியின் அறையில்,
காற்றோடு இன்றும் கலந்திருக்கிறது...
அன்பின் நினைவலைகளாய்!

2 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

கல்லூரி நினைவுகளை மறக்கத்தான் முடியுமா?
அருமையன கவிதை..

மேனா சொன்னது…

காலை வணக்கமாய்
என்னை துயில்லேழுப்ப வந்திடும் நீ
விடுதி அறையில் காற்றில்
பாசப்பிணைப்புடனே கலந்திருந்து,
நலம் பல விசாரித்து
ஈற்றில் குட் நைட்,கோட் ப்ளேசஸ் யு சொல்லி
உறங்க வைக்கும் வரை
அன்பாலே உருக்குகின்றாய்.
பின்பும் உன் கனவில் வந்ததாக காலையிலே
உரைக்கின்றாய்...
இதுவெல்லாம் உன் உயிரின் மீது
நீ கொண்ட அன்பின் வெளிப்பாடோ அன்றேல்
அம்மா என்றதன் தாற்பரியமோ???

கருத்துரையிடுக