
எந்தன் உறக்கத்தில்,
கனவுகள் இல்லை!
எந்தன் மனதில்,
குழப்பங்கள் இல்லை!
எந்தன் கண்களில்,
நீரும் இல்லை!
எந்தன் நினைவில்,
நீயும் இல்லை!
ஆனால்...
பிரிவின் வலி மட்டும்,
எங்கிருந்தோ வாட்டுகிறது.
ஆகவே...
உந்தன் மடி உறங்க,
கல்லூரி விடுமுறையை நோக்கியே,
இனி நாட்களின் பயணம்...
4 பின்னூட்டங்கள்:
அழகானத் தவிப்பு வார்த்தைகளில் உணரவைக்கிறது உங்களின் கவிதை . பகிர்ந்தமைக்கு நன்றி
Good Lines :)
மிக அழகான வார்த்தையுடன் ஏக்கம் காட்டும் கவிதை ..
பிரிவின் வலி உயிர் பிரிவதிலும் கொடுமையாய் இருக்குமோ என்னமோ தெரியவில்லை???
கருத்துரையிடுக