உன்னருகே இல்லாமல், பயில்வதில் மூழ்கிய, கல்லூரி நாட்களையும்... வேலை தேடியே, அலைந்த நாட்களையும்... மீட்டுத்தர வேண்டியே, ஒவ்வொரு கடவுளுக்கு... ஆயிரம் விண்ணப்பங்கள்!
உன் நினைப்பு வந்து விட்டால் ஒரு நொடியும் ஒரு யுகமாகும்... உன்னை பார்க்க புறப்பட்டால் பயணம் கூட உள்ளத்தை உருக்குமம்மா...
கல்லூரிக்கு சென்று சில காலம் தான். உன் நினைவோ கல்வியைக் கூட துரத்திவிட முயல்கிறது - ஆனால் நீயோ என்னை கல்வி அமுதை மென்று வரச்சொல்லி துரத்துகிறாய்...
என் உள்ளமோ அமைதி அடையாது உன் நினைவில் உருகுகிறது நீயும் இதை அறிந்தும் அறியாதவளாய் உன் செல்ல மகளின் வாழ்விற்காய் பிரிவுத் துன்பத்திலும் இன்பம் காண்கின்றாய்...
4 பின்னூட்டங்கள்:
neyum naanum athellam pannathe illa da...
நல்லாயிருக்கு...
மீட்டுத் தர வேண்டியே..
இந்த வரி கவிதைக்கு அழகையும் அழுத்தத்தையும் ஒரு சேரத் தந்து விடுகிறது..
உன் நினைப்பு வந்து விட்டால்
ஒரு நொடியும் ஒரு யுகமாகும்...
உன்னை பார்க்க புறப்பட்டால் பயணம் கூட
உள்ளத்தை உருக்குமம்மா...
கல்லூரிக்கு சென்று சில காலம் தான்.
உன் நினைவோ கல்வியைக் கூட
துரத்திவிட முயல்கிறது - ஆனால்
நீயோ என்னை கல்வி அமுதை
மென்று வரச்சொல்லி துரத்துகிறாய்...
என் உள்ளமோ அமைதி அடையாது
உன் நினைவில் உருகுகிறது
நீயும் இதை அறிந்தும் அறியாதவளாய்
உன் செல்ல மகளின் வாழ்விற்காய்
பிரிவுத் துன்பத்திலும் இன்பம் காண்கின்றாய்...
கருத்துரையிடுக