0

பூ பூக்கும்...

கண்கள் கானும்
காட்சிகளெல்லாம்
கனவாகும் நிலை
எனினும்
நீ வந்து செல்லும்
நேரம் மட்டும்
என் மனதின்
நினைவுகளாய்
பூ பூக்கும்...
0

வரிகள்

காற்றின் அலையில்
உன் விழியின் வரிகள்
வெற்றிடத்தை நிரப்பும்.
என் வேதனையின்
துயர் நீக்க மயிலிறகின்
மென்மையாய்
என் மனதை வருடும்
நிந்தன் காற்றிடத்தே
அனுப்பிய வரிகள்!

கருமேகத் திரை

இமை எனும் இறையை
விழியாகி வணங்கவில்லை
ஏனெனில்
உன்னுடன் நானிருந்த
நாழிகையில்
சிறு கனம் விழியைத்
திரையிட்டு கருமேகக்
கனவாகியது
திரையிட்டது சிறுகனமே
எனினும்
நிலைகுலைந்து துகள்களானேன்

இரவில் மட்டும்
நான் வருந்தவில்லை
நீ என்னுடன் இல்லாமல்
இருப்பதாய் காட்டும்
வெள்ளித் திரையாய்
இமைகள்
கனவுகள் தருவதால் தான்
0

பஞ்ச வர்ண கனவுகள்

என் நெஞ்சில்
பஞ்ச வர்ண கனவுகள்
வண்ணத்துப் பூச்சிகள் கூட
இப்படி சிறகடித்துப் பார்த்ததில்லை
இன்பங்கள் இன்று
துளிர்விட்டுத் திரிகிறதே!
0

நகைக்கிறதே...

இளஞ் சூரியன்
எட்டிப் பார்க்கையிலே
ஒடும் நீர்க் கூட்டம்
முகம் சிவக்கிறது.

நீ எனைக் கடந்து
போகையிலே
என் நினைவுகள்
நகைக்கிறதே?

இரண்டாம் நிலவு

நட்சத்திரத்தை நான் பரித்து
உனக்குத் தர எண்ணியே
கார்முகிலை கடன் கேட்டேன்
முகிலினங்கள் தடுத்தது
நிலவின் அருகில் நிற்க
பயந்து தான் நான்
நட்சத்திரத்தை சிதறடித்தேன்
மீண்டும் அவைகளை
அருகில் கொண்டு செல்வது
முறையோ? தகுமோ?
0

நட்சத்திரம்

என் மனமெனும்
கார்முகிலின் நினைவுகள்
சுடர்விடும் நட்சத்திரம்
ஒவ்வொன்றும் உன்னுடன்
நானிருந்த நேரங்கள்
0

இளஞ் சூரியன்

ஆயிரம் ஆயிரம் கருநதி
உன் கரு நீளக் கருங்கூந்தல்
கலங்கமில்லா வெண்ணிலவு
நின் முகத்தின்
தடகத்தில் ஓர் அதிசய
பூ தான் நிந்தன்
செவ்விதழ் செந்தாமரையோ
பரந்து விரிந்த வானின்
இளஞ் சூரியன்
நின் நுதற் திலகமோ...
0

சிகரம்

மலைச் சிகர
உச்சிக் குளிர்மை
போல்
என் மனமும் சற்றே
அந்நிலை எய்தியது
அன்பெனும் பனிமழையை
நீ எந்தன் மனதோடு
பொழிந்ததனால்

மேலும் மேலும்
குளிர்கிறதே
நெஞ்சுக்குள்
பனிச் சிலையாய்
நீ இருப்பதனால்
0

கரு முத்து

கல்லாக அவன் படைத்தான்
உளியாகி என்னைச் செதுக்கினாய்
அன்பெனும் பேரமுதப் பொழிவை
ஒரு கனமும் நிறுத்தவில்லை
உன் விழிக்கூட்டின்
கரு முத்தாய் திரையிட்டு
எனைக் காத்தாய்
தாயே உனை எங்ஙனம்
நான் போற்ற?