பேசும் மழலை மொழியையும், செய்யும் அழகான குறும்பையும், தத்தித் தவழும் நடையையும், கை தட்டி சிரிப்பதையும், புன்னகையோடு கண் சிமிட்டுவதையும்... பார்த்து பார்த்து இரசித்து, நீ பொழியும், உன்னுடைய அன்பால்... மழை வரும் முன்னமே, ஆனந்தமாய் நனைகிறேனே!
இதமான தென்றலும், நறுமண வாடையும், கலந்த காற்றால் வரும், உறக்கத்தை காட்டிலும்... தலை வருடி, தட்டிக் கொடுத்து, தாலாட்டு கேட்டு வரும், உறக்கம்... எவ்வளவு அழகு!
வாங்கி வந்த இனிப்பை, ஒரு கடி கடித்தவிட்டு, மீதத்தை தரும் பொழுது... உந்தன் முகத்தில் பொழியும், அமிழ்தை உண்ட ஆனந்தத்தை, காணும் பொழுது, எனக்கும் ஆனந்தமே!!!
உன்னருகே இல்லாமல், பயில்வதில் மூழ்கிய, கல்லூரி நாட்களையும்... வேலை தேடியே, அலைந்த நாட்களையும்... மீட்டுத்தர வேண்டியே, ஒவ்வொரு கடவுளுக்கு... ஆயிரம் விண்ணப்பங்கள்!