skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
6
நூலிழை அளவு வெட்கம் போதும்
நூலிழை அளவு தான்,
நிந்தன் வெட்கம் என்றாலும்...
போதும், போதும்
என்றது என் மனது.
பாவம்!
அவனுக்கு எப்படி தெரியும்?
நின் வெட்கத்தின் விலை,
மதிப்புகள் அற்றது என்று!
7
மீதமான வெட்கம்
கண்களின் ஓரம்
மிதமான குளிரும்;
முகம் முழுதும்
தெரித்து ஓடும்
மீதமான வெட்கமும்;
ஒன்றாகக் கிடைத்தால்
இதமான இரவில்...
நிந்தன் நினைவும்,
எந்தன் மனமும்,
ஒன்றாய் இணைய...
இமை இரண்டும்
வருடுதல் தகுமோ?
5
எந்நாளும் இரவாக...
நின் கூந்தலின்
வாடை நுகர்ந்தே
இரவினில் பாதி போனதடி
நின் விழியில்
இதழ் வருடி
மீதியும் பகலாய் ஆனதடி
நிலவாய் நானிருந்தால்
சூரியனை சிறையிட்டு
விடியலையும் இரவாக்கி
உன் வசப்பட்டு இருப்பேனடி
9
தீண்டல்
விழியால், சுவாசக் காற்றல்,
விரலால், உள்ள உணர்வால்
எனைத் தீண்டிப் பார்த்தாய்
பயனேதும் இல்லை யென்று
சற்று விலகியே போனாய்...
பெண்ணே நின் தீண்டலை
யான் நிலையாய் பெறவே
சிலையாய் நின்றதை யறிவாயோ?
2
மழை
வரும் வரை
நின் வரவை
எதிர் பார்த்திருப்பேன்
வந்தபின் உன்னையே
பார்த்திருப்பேன்
அடி பெண்ணே
நீயும் மழை தான்
10
அம்மா
ஆயிரம் வார்த்தைகள்
ஆழத் தேடிடினும்
அன்பெனும் வார்த்தைக்கு
அகராதி கூறும்
அருஞ்சொல் அம்மா
4
தேனாய் ஊறியதே
அமுதாய் பொழியும்
அன்பின் நினைவால்
ஐவிரலில் தாழ்ந்தவனின்
தலையின் உச்சத்தில்
கருவிற் குயிரூற்றிய
தாயின் ஞாபகமெலாம்
உணவாய் ஏற்றி
வாயதனில் இட்டேன்
இட்டதெலாம் குழைந்து
தேனாய் ஊறியதே
2
அன்பின் அரணே
விழி உறங்கிடினும்
மறவாமல் எந்தன்
கால்களில் ஒன்றும்
கைகளில் ஒன்றும்
இயங்கா நிலையில்
உனை அணைக்கும்
அன்பின் அரணே
அன்னையே தாயே
1
வளர்பிறை
தேய்பிறைக் காணா
மனதோடு ஊறும்
மல்லிகையும் தோல்வியைத்
தழுவும் அன்பெனும்
இவளின் புன்னகையை
விழியின் துணையோடு
வார்த்தையால் கொணர்ந்து
காட்டும் அன்னையெனும்
திங்கற் பெண்ணிவளின்
அன்பிற்கு இவ்வுலகில்
உவமை உண்டோ
3
ஆலமரம்
எலும்புகள் தேய்ந்திடினும்
உடம்பொடு தலையும்
தொங்குதற் கண்டுவிடினும்
ஆலமரம் விழுதூன்றி
நின்றாற் போல்
கோலெனும் துணையதனை
கைகளிரண்டும் தேடிடினும்
தாயே எனக்காக
நிந்தன் யாக்கை
ஒருபோதும் ஓய்வறியாது
உழைத்தமைக் காண்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
பட்டியல்
▼
2024
(4)
▼
மார்ச்
(4)
அரங்கேற்றம்
மை விழிப் பாதை
ஆடை
அழகியலின் விதி மீறல்
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
அழகாக இருக்கிறாய்...
உடைகள் உன்னை விழுங்கிய பிறகும் அழகாக இருக்கிறாய் பெண்ணே... காரணம்? நீ அழகா? உந்தன் உடை அழகா? உடை உடுத்தும் விதம் அழகா?
கருவறைக் காதல்
இடர் கொண்டு ஈன்றாலும், இன்பம் என்றே எண்ணினாய்! பசித்தாலும் புசிக்காமல், எந்தன் பசியாற்றினாய்! துன்பங்களை மறைத்துவிட்டு, இன்பத்தை மட்டுமே, ப...
நிலைகொள்ளு மனமே...
பணம் என்னும் பேயும் ஆசை என்னும் மிருகமும் மரியாதை என்னும் அரக்கனும் ஆட்கொண்ட மனித மனமே... நீ நிலைகொள்ள வேண்டாமோ? பணப் பயனடைய... அன்பையும்...
ஓரக் கண்ணால்...
ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு என்னைக் கடந்து செல்லும் பொழுது உன்னுடனே வந்துவிடுகிறது என் மனது... இனியும் என்னைக் கடந்து செல்லும் பொழுது ஓரக...
காலங்களில் அவள்...
புதியதோர் உலகை உனை கொண்டு காண கிடைத்த அழும் குரலால் எனை அழைக்கும் பெண்ணே... இவ்வுலகிற்கு இது தான் உந்தன் முதற் காலம்... அழு குரல் மறந்து ம...
எத்தனை அழகு?
சன்னதியில் பெற்ற, குங்குமத்தை கையில் ஏந்தி, நெற்றியில் இட்டு, கோவிலைச் சுற்றி வந்து, கடவுளை காணும்... செய்கை அழகு! கோவிலைச் சுற்றி, நடக்கு...
காதல் கடிதம்
உன் பார்வையால், எந்தன் வெட்கங்கள்... உதிரக் கண்டேன்! உன் தொடுகையால், எந்தன் நாணம்... நொறுங்கக் கண்டேன்! உன் சிரிப்பினில், எந்தன் மனம்... சுர...
தேடும் கண் பார்வை...
அலைகள் அறியா... வெண் கடலின், கருவட்டத் தெப்பம், மையிட்டக் கரையோரம், சுழன்று கொண்டே இருக்கிறதோ... எந்தன் வரவை காண?
பேருந்தில் நீ எனக்கு...
என்னை பார்த்து, அன்று ஏனடி, அழகாய் சிரித்தாய்? பேருந்து பயணத்தில்... சன்னல் ஓரத்தில் அமர்ந்து, காதுகளுக்கு இனிமையாய், இசை பகிர்ந்து கொண்டிரு...
தண்டனை...
முத்தத்தின் சத்தம் உலகில் ஓய்திடினும் எந்தன் மனதோடு ஓயவில்லை... அதன் ஈரம் உதட்டோடு காய்ந்திடினும் எந்தன் மனதோடு காயவில்லை... உணர்வுகளால் ...
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab