0

கருஞ் சூரியன்

வெள்ளி மேகத்திற்கு
பொட்டு வைத்தேன்
கருஞ் சூரியன்
என்றே சொன்னேன்
திரையிட்டு
மறைத்து வைத்தேன்
என்னவள்
உறங்கிப் போனாள்...

திரையிட்டது
அவள் விழிகளுக்கு
கருஞ் சூரியன்
உறங்குவதற்கு!

பிரம்மன்

பிரம்மனுக்கு நன்றி
நவில்வேன் உனைபடைத்ததற்கு
இருப்பினும்
அவன் மீது கோபம்
எனக்கு
காலமெனும் காலனை
காரணமின்றி
கரு விதைத்ததற்கு
2

சிறை

உன் வார்த்தை
சங்கீதக் கீற்றுகள்
தெரிக்கும் புதுக்கவிதை
விணையின் நாதமும்
உன் வார்த்தைக்கு
செவி மடுக்கும்
காரணம் கேட்டால்
எனை அக்கனமே
சிறையெடுக்கும்
0

காதலன்

உன் விரல்கள்
விளையாடும்
புது யுகக் காதலன்
சங்கீதம் உட்கொண்ட
பாடகன்
உனைப் புகழ் பாடும்
கவி எனக்கு
சிரம் தாழ்த்தும்
என் நண்பன்யாழெனும்
இசைஞன்
0

புல் நுனியில்...

விடியலின் நீர் துளி
பச்சை புல் நுனியில்
முத்தமிட்டு காதோடு
கவி பாடும் காலை...

உன் குழி விழுந்த
கைகளில் முத்தமிட
காற்றோடு உனக்கு
கடிதம் வரைந்தது.

நீயும் குவிந்த கைகளில்
நீர் துளியை தானம்
பெற்றாய்.

நானும் உன்
மனதை வெல்ல
யாரிடம் கவி பாடுவேன்.
0

நீ நுழைந்தாய்

சுடும் சூரியனைக்
கடன் வாங்கி
ஓடையினும் குளிர்மையாய்
மனதின் பனிமழையாய்
வெண்மையை படரவிடும்
நிலவினும் மென்மையாய்
என் மனதில் நீ நுழைந்தாய்
0

உன்னை எண்ணி

இருளை நோக்கி
மாலை நேரம்
செல்ல செல்ல
உன் நினைவுகள் என்
நெஞ்சில் வளர்பிறை தான்

கருங்காட்டு நிலவு

உனைக் கண்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
என் விழியிரண்டும்
தேய்கிறது
கருங்காட்டு நிலவைப்போல்...
6

தாய்

உனக்கு உவமைகள்
தேவையில்லை
நீயே உவமையாகிறாய்!
அன்பெனும் மழையும்
நிலவாய் அரவணைப்பும்
குளிரோடையென எனைச்
சுற்றி உந்தன் நினைவுகளும்...

போதும் போதும்!
வரிகள் சிக்கவில்லை
வார்த்தை தேடல்கள்
நிற்கவில்லை...

எதைக் கொண்டு நான்
உந்தன் பெருமை கூற...

தாயே பிறவியால்
நான் உனக்கு சேய் தான்
ஆனால்
நான் பொழியும் அன்பால்
நீயும் எனக்கு சேய் தான்
0

வருத்தம்

உன் விழியோடு வழியும்
சிறு தூரலும் சில நிமிடம்
என்னைச் சிதறடிக்கும்.

என் செவியை சிறையெடுக்கும்
உன் சிறு அழுகையும்.

அன்பே உன் மனதோடு
எண்ணத்தை கடனாய்
கொடுப்பாயா
உன் வருத்தம் என்னோடு
போகட்டும்
ஏனெனில் என் விழியின்
உனது கண்ணீருக்கு
எனது விரல்கள் பதிலளிக்கும்!
0

உயிர் + உடல் = ?

வாழ்க்கை ஓர்
நீரோடை
இதை உணர்ந்தேன்
நிலவெட்டிப் பார்க்கயிலே.

என் உயிர்
குளிரோடையிலே
மெல்லிய
வாடைக் காற்றிலே
படகேறி
கரையோடு
உறவாடிக் கொண்டிருந்தது...
உடலோடு உயிர்
சேரவே...

உன் மனம்
பச்சிளம் கதிரை
முத்தமிட்டு அலையாடி வரும்
இளங் காற்றோடு
வந்து
உடலோடு உயிர் சேர்வதை
என் மனம் மட்டும்
உயிர் கொண்டு கண்டதடி
மனதோரம் இன்பம்
மொட்டவிழ்ந்து
மலர்ந்ததடி
0

உண்மை

பூவின் மென்மையை
உணர்ந்தேன்
என் மனதின் ஆழத்தில்
ஊடுருவிய உன்
மெய் பிம்பத்திலே...

அக்கனமே ஓர்
உண்மையை உணர்ந்தேனே;

நான்
உயிரற்ற உடலாய்
அலைவதாய்...

உன்னை
எந்தன் உயிரை
ஏற்றுச் செல்லும்
ஊடகமாய்...

உயிர்

சிலையாக உனை நான்
உளியாயிருந்து செதுக்கவே
நித்தம் நித்தம் ஆசைக்கொண்டேன்...

சிறு நொடி என்னுயிர்
என்னிடம் இல்லையடி
இதைக் கேட்டு நீ
சொன்னதைக் கண்டு!

சிற்பியாய் நீ இருப்பின்
என்னுயிராவது யார்?
0

சரிகமபதநி...

ப்தம் சிறியதாய்
ரி... ரி... என ரீங்காரமிடும்
ரு வண்டு
யங்கித் தான் போனதே!
சியாலல்ல;
ங்கத் தண்ணீராய் பதுங்கிய
நின்னைத் தேனெனப் பருகியதால்!
0

பட்டறை

என் விழியால் சூழப்பட்டு
மூலையெனும் படச்
சுருளிள் சுழற்றப்பட்டாய்...
இமை மூடி
உன்னை என்னுள்
வீழ்த்திய கனமே
நெஞ்ச மெனும்
பட்டறையில்
மெய்யான பொய்மையாய்
நிழற்படமானாய்!
எந்தன் நினைவுகளாய்...
0

நிலவு

ஒளியை இரவல் வாங்கும்
இரவுப் பெண் நீயே!
வெள்ளிச் சுடரே...

நீ யாரைக் கண்டு
உருகித் தேய்கிறாய்
என்பதை எனக்கு மட்டும்
சொல்லடி...

அவள்
உன் போல்...
என் மனதிற்கு
ஒளியூட்டும்
தேய்தலறியா
பெளர்ணமி
வெளிர் நிலவாய்
நினைவுகளோடு
விளையாடும்
என்னவள் தானென்று.
0

மழை

நின் விழித் திரை
எனக்கு வழிவிடுமோ
உன் கருமணியில்
நிழலாட...

நின் மனதோடு
மழைவருமே
நான் அங்கே
வருகையிலே!

வேதனை

வண்ணங்கள் விலகிப்போய்
துளிகள் உன் விழியோடு
உறவாடுவதேனடி
நின் கருமணியில்
கண்ணின் நீர்த்துளிகளுக்கு
இடமில்லையோ பெண்ணே
நான் அங்கு வசிப்பதால்...

எனக்கு
நிந்தன் கருமணியில் நிழலாடும்
உருவம் கூட விழியின்
வேதனை தான்...
ஆகையால்
இக்கணம் முதல்
விழியோடு திரையிட்டு
உறவாடும் இமையாவேன்
நான்!
0

பாதைச் சுவடு

இளங்காலை வேலை
காதோடு மொழி பேசும்
மெல்லிய வாடை காற்று
வீசுகையில் நான்
வெண்மணலோடு
உறவாடிச் சென்ற
பாதைச் சுவடுகளும்
உன்னைச் சரணடையவே
காத்துக்கிடக்கின்றன...

என் கண்மணியே
நீ வரும் நேரம்
நிலவு வரும் காலம்
என்னக்குள்ளே மெளனமாய்
பேச வேண்டும்...
0

முதல் கனவு

சல சலப்பில் சிக்கிச்
சலனப்படும் கடல் நீரும்
சிவந்து நிற்கும் நேரம்
ஒற்றைக் கண் கொண்டு
கீற்றுகள் சிதறிச் சிரிக்கும்
இக்கணம் பகலவன்
பட்டாடை விரித்தத் தருணம்
நீ சோம்பல் முரிக்க
நான் காணும் முதல் கனவு
0

அகராதி

உன் முடிவென்னும் வார்த்தைக்கு
என் அகராதியில் புதிய
விளக்கம் கண்டுகொண்டேன்
அதை என் இறப்பென்று
அர்த்தம் கொண்டேன்.
0

பறவை

அன்பே வெகு தூரத்தில்
சிறகடித்துப் நீ பறந்தும்
என் மனம் முழுதும்
அலையாய்
உன்னை மட்டும் தானடி
வட்டமிட்டுத் திரிகிறது...

இதைக் கண்டு என் மனதோரம்
ஒரு வினா
துளிர்விட்டுத் திரிகிறது
பறவை என்பது
நீயா? நானா?
இருவரும் இல்லையடி
அது என் மனம் மட்டும் தானடி
0

கரு நீல மயில்

அழகாய் அழகழகாய்
வண்ணங்கள் எண்ணங்களாய்
நினைவுகளுக்கு
உயிர் கொடுக்கும்
கரு நீல மயில்
என் கனவுகளை
தோகையாய் கொண்டு
ஆடுகிறது...

உன் நினைவு அலைகளின்
மழை பொழிவை
முன்பே அறிதமையால் தான்
இந்த இன்பத் துாரல்கள்...
0

நீ ஒரு கவிதை

கவிதையின் கருவறைக்குள்
வெகு நேரம் காத்திருந்தேன்
கவியாகி கவிதையாய்
உனைப் பார்த்திருந்தேன்
உன் விழியை நான்
காண இமை எனும்
தாழ் அகற்றி
மெளனமாய் போர் தொடுக்க
என்னுள் வாராயோ...

வெறுமையை விளக்கி
என்னுள் உனை
அச்சேற்றி போவாயோ...
2

கவிதை

கவிதைகளை களவாட
வரவில்லை நான்
இரசனையின் சுவையுணர வந்தேன்
படைப்புகளை பகிர்ந்துகொள்ள
உறவுகள் பிறந்திட வேண்டும்
உங்கள் உயிர்களை
இங்கே ஊற்றுங்கள்
கவிதைகள்
0

வாழ்க்கை யேடு

நீரோடை சலசலப்பில்
வாடை காற்று வீசுகையில்
பச்சை பற்கள்
கருத்ததாய் தோன்றும்
கார்முகிலும் தன் தோகை
விரித்துச் சிரிக்கும்
நேரம் இவ்விடம் நீ
இருந்தால் போதுமடி
வாழ்க்கை யேட்டை
முழுவதுமாய் சுவாசித்து
மூடியதாய் தோன்றுமடி
3

பிரிவு

நட்பின் பிரிவில்
வேதனையும் சுகம் தான்
காதலின் பிரிவில்
ஊடலும் சுகம் தான்
உன்னுடைய பிரிவில்
நானும் சுகம் தான்
இது ஏனோ
என் உயிர் உன்னிடம்
இருப்பதனாலோ
உடலோடு ஒன்றியிருப்பது
உயிர் தான்
என்னோடு ஒன்றியிருப்பது
நீ மட்டும் தானடி
0

குளிறோடை

மனதோடு குளிறோடை
சிலிர்த்துச் செல்லும்
இவ்வேலை
நீ என் நெஞ்சில்
தூரமாய் விளையாடும்
ஒரு பகடை
0

மழைத் தூரல்

வெள்ளிக் கீற்றுகள்
விழியிரண்டில்
வீணை மீட்டி
எனை வதைத்தாய்
தாமரை இதழ்களின்
இராகம் பாடி
எனை அழைத்தாய்
கண்மணியே கார்மேகம்
கருங்கூந்தல் காற்றுடன்
மொழி பேசும் வித்தையை
கண்கொண்டேன்
விழியோடு விளையாடும்
வெறுமை கற்றுக்கொண்டாய்
வாட்டியது போதுமடி
என்னை உன் மனதின்
மழைத் தூரலாய்
தெளித்துக் கொள்ளடி

கற் சிற்பம்

கற் சிற்பமும் சிறகடிக்கும்
கண்மணியே உன் விழியிரண்டும்
மொழி பேசினால்
நானே தான் அச்சிற்பி யெனில்
என் விழியே உளியாகுமோ
0

விண்மீன்

வெண்ணிலவில் வாடை தேடும்
விண்மீன் நானோ
உன்னிலே என்னைத் தேடும்
பேதை தானோ
நினைவுகள் தன்னில்
நித்தம் நித்தம்
நின்னை மனதில்
நிறுத்திக் கொள்ள நானும்
எண்ணியது சரிதானோ
0

வெண்பனி

கண்ணிலே கார்மேகம்
திரையிட்டுத் திரிகிறதே
உனை கண்டு என் மனது
சிறகடித்துப் பறக்கிறதே
சேருமிடம் தெரியாமல்
காற்றிலே அலைகிறதே
வெண் பனியும்
எனை தொட்டுத் தொலைகிறதே
இவ்வாட்டம் கலைய
திரை விலக்க வருவாயோ
என் மனம்வருடிப் போவாயோ
0

மழைத்துளி

துளித் துளியாய் மழைத்துளியாய்
என் செவியிரண்டின்
கருந்தாழகற்றி நீ சிந்திய
மழைத்துளி தான்
தேனருவியாகிய கவித் துளியோ
2

சிற்பி

சிற்பங்கள் செய்வதை
செயலெனக் கொண்டேன்
நான் சிற்பியல்ல
என்பதை கண்டேன்
வலி தாங்கிச் சிரிக்கும்
கற்களுக்கு சொன்னேன்
நீ இன்று நானானால்
என்னை நீ சிதைப்பாயோ?
2

முத்தம்

கன்னத்தில் கடன் வாங்க
காற்றுக்கோர் கவிதை சொன்னேன்
கண்களுக்கு ஒளியூட்ட
கண்மணியாய் உனை வைத்தேன்
விழியிரண்டும் வைரங்களாய்
வெள்ளிக் கீற்றுகள்
நகைத்தனவே...

என்னுயிரை இமையாக்கி
என்னுள் உனைச்சிறையிட்டேன்

வண்டு

தேனைக் களவாடும்
வண்டாய் பிறந்திருந்தால்
தேன் கொண்ட பூக்களாய்
இருக்க வேண்டுமாய்
தவித்திருப்பேன்...
0

சிறுமுல்லை

வெள்ளி மலர்கள்
வெளிச்சம் தரும்கார்
முகில் நகைக்கும்
நேரமிது வாடைகாற்று
எனை வருடிபோகிறதே
மனம் குறைவின்றி
முதலாய் ஞாலம் காணும்
சிறுமுல்லைப் போலவே
நிறைந்திருப்பது நினைவுகள்
சின்ன சின்ன கனவுகள்
அனைத்தும் உனையன்றி
வேறில்லை...

நினைவுகள்

நினைவுகள் மின்னும் விளக்குகள்
சலனமில்லா நீரோடையில்
தத்தளிக்கும் படகு
நீரேற்றி போகும்
அக்கனம்
நெஞ்சம் கொஞ்சம்
கொஞ்சி கொஞ்சி பேசும்
நினைவுகள் மின்னும்

மொட்டு

வீசிய குளிர் காற்று
செவியோடு கவி பேசிபோன
தேநீரோடைக் குளிர் நீரை
சலனமின்றி மொட்டெடுத்து
மகிழ்ந்தேனே
என்னுள் உனைத் திணித்து
நனைந்தேனே...
2

வெண் மல்லி

மல்லிகையும் உன் மனமும்
வெள்ளை தான்
அதைக் கண்டு போகும்
என் மனம்கொள்ளை தான்
உன் போல் அதுவும் சிரிப்பதனால்
என் விழியோடு
அதை வைத்துப்பார்த்திருப்பேன்
பெண்ணே நீ எனைக்
கண் கொள்ளவில்லையாதலால் என்
விழியோடு வாழ்வளிக்கிறேன்........