2

உன்னைப் பற்றி...

உன்னைப் பற்றி
நான் என்ன சொல்ல...

உயிரை உரித்து
உதிரத்தை உணவாய்
உறிஞ்சும்
உன் பார்வை

இது நாள் வரை
நாம் பேசாத
வார்த்தைகளெல்லாம்
சேர்த்துப் பேசும்
உன் மெளனம்

இது வரை காணாத
திரை மறைவுச்
சித்திரமாய்
என் உருவம் காட்டும்
கருவண்டாய் போன
உன் விழிகள்

நம் நினைவுகள் அனைத்தும்
ஒருங்கே உயர்த்தி
நிழற் படம் காட்டும்
உன் புருவங்கள்

நாம் இருவரும்
ஒன்றெனக் காட்டும்
என் உயிரை விதைத்து
உதித்த குளிர் நிலவு
உன் நுதற் பொட்டு

சொல்வதற்கு வார்த்தைகள்
சிக்கவில்லை
0

பீலி

கருமேகம் கண்டவுடனே
பீலியை படரவிடும்
மயில் பெண்ணே!

நீ யுதிரர்த்த ஒற்றைப் பீலி
அம்பாய் மாறி
மனதில் சொருகுதல்
முறையோ?

பெயர்

எழுதுகோளின் விழியோடு
வழியும் மையாகிப் போன
நீர்த் துளிகள்
சில நேரம் சிரிப்பது ஏன்?
புரியவில்லை...

நகைத்த நேரத்தில்
உற்றுப் பார்த்தேன்
முத்து முத்துக்களாய்
உன் பெயர்கள்...
0

நிலாப் பெண்

புவி ஈர்ப்பை
உதரிவிட்டு
நிலவீர்ப்பை
கையகப்படுத்த
நீர்க் கூட்டம்
அலைகளாய்
பொது குழு கூட்டும்
அன்பே நீ நிலவானால்!

குளிர் கொண்ட
நீர்களனைத்தும்
காணாமற் போனதே
பெண்ணே நீ என்னவானாய்!
0

முதல் முத்தம்

அந்த நிமிடம்
உணர்ச்சிகளின் உச்சம்
நரம்புகள் அனைத்தும்
இருகிப் போகும்
செங்காந்தல் மலரின்
நிறம் கொண்ட
ஓய்வில்லா செந்நீரும்
உறங்கிப் போகும்
உயிரை சில நேரம்
உடலே உமிழ்ந்துவிடும்

காரணம்?

நீ கொடுத்த
முதல் முத்தம்

என் முதல் தோழி...

நடப்பவையாவும்
நிழலாய் மாறி
சொல்வதை ஈர்க்கும்
என் முதல் தோழி
அம்மா தான்.
0

உறக்கம்

விழியெனும் பெட்டகத்தின்
கரு நிலவாகிப் போனவளே

உன்னை நானும்
சிறை வைக்கும்
உறக்கத்தை வெறுக்கும்
பேதையாய் மாறிப் போனேனே...
0

ஒற்றை மரம்

கருங்காடு ஈன்றெடுத்த
ஒற்றைக் கால் பிள்ளையே

உன்னோடு உறவாட
ஒருவன் மட்டும் வருவானே!

வெறுமையும் உருமாறி
இசையாகிப் போவானே
காற்றென்னும் அவனே
உந்தன் காதலனே

ஒற்றைக் கால் சிலையே
நான் உன்னில்
முதிர்ந்த இலையே...
0

ஒளி

உறங்கும் நேரமோ
உயிர்விடும் நேரமோ
எனக்கே தெரியவில்லை

கனவு வரும் நேரமோ
காலன் வரும் நேரமோ
நான் அறியவில்லை

இரவு உறக்கத்தின்
குழப்பங்கள் இவை தான்
காதலெனும் சுடரொளி
ஏற்றம் கண்ட பின்பு...

எனக்கு மட்டும் தான்

இறப்பு என்பது
எனக்கு மட்டும் தான்
என் மனதோடு வாழும்
உனக்கு அல்ல

ஏனெனில்
என் மனமொரு
தாயின் கருவறை...

காலன் வந்து
என்னுயிர் கொண்டு
சென்றாலும்
பிறவா மழலையாய்
நீ எந்தன்
மனதில் என்றும்
உயிர் பெற்றிருப்பாய்...
0

ஆலயம்

உயிரைக் கிழித்து
இரட்டிப்பாக்கி
கருங்காட்டுச் சித்திரத்தை
கருவரையில்
சிலை வடித்தாய்.

சிலை உயிர்
கொண்ட நாளன்று
இன்பங்கள் கோடியாய்
ஊற்றுவிக்கும் மனதின்
கோவில் தன்னில்
தீபத்தை ஏற்கும்
கடவுள் தானே
தாயே நீ!
0

புன்னகை

முதிர்ந்த பூக்கள் யாவும்
மண்ணிற்கு முத்தமிட்டு
நகைக்கிறது?

நீ உதிர்த்த புன்னகையும்
என் மனதில் புதைந்து
மனக்கிறது.
0

கருத்த நட்சத்திரங்கள்

வானில் நான் வரைந்த
நட்சத்திரங்கள் மின்னவில்லை...!
எனக்கும் விளங்கவில்லை?
இன்று அமாவாசையாம்...
நிலவு தேவதையாய்
நீ வர எண்ணித்தான்
சிரிக்காமல் முகங்களனைத்தும்
கருங்காட்டு கலவையாய்
கலங்கிக் கொண்டிருக்கிறது.
0

தேவதை

வானத்து வனதேவதை
தன் முகம் முழுதும்
இளங் குங்குமத்தைத்
தெரித்தார் போல்
சிவந்து நிற்க
காரணம் என்ன?

விடியல் தொட்டு
நீ தெரிக்கும்
வெள்ளி கீற்றுகளால்
சிறுகச் சிறுக
அவள் நாணத்தை
சுட்டதனாலா?
பதில் வேண்டும்
ஆதவனே!
0

வெள்ளி கயற்கள்

செல்லுமிடங்களில்
வைத்த சுவடுகள் எலாம்
குளிரோடை குளிர் நீரின்
வெள்ளிக் கீற்றுகளாய்
விரும்பி விளையாடும்
கயற்களாய் மாறிப்போன
எந்தன் நினைவுகள்...
0

சிறகொடிந்த பறவை

நீரோடு உறவாடி
நீந்தி வரும்
அன்னமே
நிந்தன்
அழகை கூறும்
சிறகிரண்டும்
என் மனதிற்கு
தானம் வார்ப்பாயோ?
என்னவளை கண்டதால்
ஒற்றைக் காலில்
நர்த்தனம் செய்யும்
பச்சிளம் புற்கள் போல
என்னுடனே
சிறகொடிந்த பறவையாய்
சிறை செய்து கொண்டதே
0

உடைந்த நிலா

வீட்டின் தூணை
அனைத்த படி
குளிர் சிரிப்போடு
நீ சிந்திய
சிறு வெட்கம் கண்டு
நிலவு ஆயிரமாய்ச் உடைந்து
நட்சத்திரங்களாய் மின்னுதடி
0

உதிர்ந்த பூக்கள்

அள்ளித் தெளித்து
முகத்தில் படர்ந்த
நீர் மொட்டுகள்
முத்தமிட்டு உதிர்ந்தது

நிந்தன் நிலவு
முகத்தின் கலங்கத்தை
விளக்கி உதிர்ந்த
நீர்ப் பூக்கள்
எந்தன்
உயிர் வேர்கள்
0

காகிதப் பூவில் தேன்

ஈறாரு வருடங்கள்
பொறுத்திருந்து பூக்கும்
குறிஞ்சியும்
உனைக் கண்ட மறுகனம்
நகைத்து முகம் சிவக்கும்

நீ கடக்கும் காரணத்தால்
வழியோரம் வசந்தம் வீசும்
காகிதப் பூவும்
தேன் வடிக்கும்
0

காகிதப்பூ

மலர்ந்த பின்
மண்டியிட்டு மரணத்தைத்
தழுவும் மத்தாப்பு
மகிழ்ச்சியோடு
முகமலர்ந்த மல்லிகைக்கு
நாட்கள் ஒன்று தான்
உன்னை அத்துடன்
உவமைச் சொல்ல
மனமில்லை கண்மணியே
ஏனென்றால் நீ
வாடாத என்னுயிர்
கொண்டு மலர்ந்த
காகிதப்பூ

மீட்டாத வீணை

தேவதைகள் வந்து
மீட்டிய வீணையின்
ஓசையோடிணைந்த
ஒலியின் அழகினை
நீயில்லா நேரங்களின்
என் மனதில் நான்
உணர்ந்தேன்,
உந்தன் நினைவுகளாய்
தனிமையிலே.

உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு கனமும்
மீட்டாத வீணையாகிப்
போனேனே!
0

சிற்பியாய் சில நேரம்

உன்னை எந்தன்
மனதோடுபனிச் சிற்பமாய்
செதுக்கவே
ஆசைக் கொண்டேன்.

எண்ணத்தை உளியாக்கி
சிற்பியாக நானானேன்.

உன்னைச் செதுக்க
உளியிடம் வார்ததைக்
கேட்டேன்...

என் மனதோடு
நீ இருப்பதையறிந்து
உளி தன்
விழியோடு நீர் வடிக்க
நானதை முத்தமிட்டேன்.

காதலியின் முதல் தொடுகை

ஒரு கனம்
ஒரு ஊடுருவல்
சிதைந்து போனதாய்
உணர்ந்தேன்
உண்மை என்னவென்பதே
விளங்கவில்லை
அன்பென்னும் அலையை
உள்ளிழுக்க
நீ செய்த சதி தானே?
நான் முதன் முறையாக
உணர்வுகளால் உன்னை
உணர்ந்த கனம்
உந்தன் விரல்
என்னோடு உறவாடிய
தருணம்
0

உயிர் வெடிப்பு

உனைக் காணும்
ஒவ்வொரு கனமும்
எந்தன் உயிர் வெடித்து
ஒட்டிய உணர்வுகள்
தோன்றுகிறதே கண்மணியே

மனமெனும் மாயை

நீயில்லா நேரத்திலே
வானில் துளி இடமின்றி
நிலவடைத்தது போல்
நிந்தன் நினைவுகள்
என் மனதில் குளிர்ந்த
பெளர்ணமியாய் நிறைந்தது
என்ன மாயமடி?
0

பதில்

வேரறுந்த மரத்தின்
வேதனையை யாரறிவார்
நீ இல்லா நேரத்திலே
உயிரறுந்த மரமாவேன்

என் துயர் துறக்க
நீ ஒன்று செய்வாயோ?
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
உயிரை மட்டும்
உடல் மாற்றிக் கொள்வோமா?

பதில் வேண்டும்
காதலியே...
0

சிவந்த சூரியனே

நான் செல்லும் பாதையில்
நிழலாக நீ வந்தாய்
என்னைச் சுற்றி நீ நின்றாய்
பகலில் நீ நிழலானால்
இரவில் என்னாவாய்
எந்தன் விழி நீர்த் துளியே?

ஆதவன் சிவந்துச் சுருங்கி
நிலவாகின், நிழலான நான்
நீயாவேன்.
0

அர்த்தம்

உன் வார்த்தைக்காக
எந்தன் வரிகள்
காத்து நிற்கும்
அர்த்தம் சேர்க்க...
0

வெற்றிடம்

என் வாழ்க்கையின்
வெற்றிடத்தை களையெடுத்து
இன்பத்தைப் பயிரிட வந்த
தேவதையே...
நீ செய்த அறுவடையில்
சிக்கியது என்ன?
0

வைரம்

விண்ணிற்கு வைரமாய்
நினைவுகள் மின்னும்
நட்சத்திர வானின்
அமாவாசை இரவு
என் மனம்.
0

காலணி

நீயின்றி எனக்குள் நானே
தனியாய் பேசும்சிறு கனமும்
என்னோடு நானே
செல்லறித்துப் போனேனே...

என்னைச் சுமந்து செல்லும்
காலணி கூட வலியறியாது
இந்த வலியை உனக்கு
என்னால் சொல்லவும் முடியாது?
0

கவலை ஏதுமில்லை

சந்தனமும் சிவந்து போனது
நீ சிரிக்கும் சிரிப்பைக் கண்டு!

நிலவும் சிறு நேரம் சுருங்கி
அமாவாசை ஆனதே...
இருப்பினும்
நிலவுக்கு மாற்றாய்
விடியல் வரை
நீ இருக்க
எனக்கு கவலை
ஏதுமில்லை
0

புதையல்

நீ பேசும் வார்த்தைகளெல்லாம்
என்னுள் புதைந்த புதையலடி
காலங்கள் சென்ற பின்னால்
அத்தனையும் பொற் குவியலடி.
0

காது

என் காதுகளின் ஓரமாய்
குளிர் காற்று வீசுதடி
நீ விடும் மூச்சுக் காற்று
காற்றோடு கலப்பதனால்.
2

என் எண்ணத்தில் நட்பு என்றால்

என் வாழ்க்கையில்
நான் எனும்
வார்த்தைக்கு
ஒற்றையில் ஒற்றுமை
என வேறொரு அர்த்தம்
காணச் செய்த
மந்திர வார்த்தை
நட்பு
0

மொட்டுரிந்த பூக்கள்

மொட்டுரிந்த பூக்களும்
மொட்டுக்களாய் ஆனதடி

ஏன்?
சூரியனைக் கண்டு
வணக்கம் கூறத்தான்
மொட்டவிழ்நதது...

நீ வந்ததைக் கண்டு
நிலவு இன்னும் உறங்கவில்லை
என்று மீண்டும்
மொட்டாய் சென்று
உறங்கிவிட்டது.
0

விடியல்

ஆதவன் உதயமாகும்
மலைகளா உன் விழிகள்...
நீ இடும் நுதற் பொட்டுக்கு
நான் வைத்தப் பெயர் தான்
ஆதவன்!
விடியலாய் நான் கண்டது
உன் முகம் தான்.
0

விரல்

என் விரல் நுனியில்
எட்டிப் பார்க்கும்
நகத் திரையிலும்
நிழலாய் ஆடும்
மெய் பிம்பம் நீயடி...
0

பெண்?

உன் உயிர் கொண்டு
வேறு உயிர் தரும்
உன்னை நான்
என் சொல்வேன்...
பெண்ணே
நீ வாழ்க!

கடிகாரம்

உன்னோடு நானிருக்கும்
நேரங்கள் மட்டும்
மிக வேகமாய் சுழன்று
வெறுப்பை உமிழும்
கடிகாரம்
0

வினோதம்

நின் நுதற் கொண்ட
சிறு பொட்டும்
என் பெயர் சொல்லும்!

அதை நான்
எப்படி சொல்வேன்
என் பெயரும்
வினோதம் தான்
உன்னைப் போல...
0

சரித்திரம்

புதுமை என்னும்
புத்தகம் எது?
நீயும் நானும் மட்டும்
நினைவுகளாய் தவழும்
ஒற்றை ஏடு
சரித்திரம் தான்...
0

கனா

உன் விழிக்
கருவின் திரையிலே
நான் வந்து
கனா காண்கிறேன்

திரை மறைவில்
தோன்றுவதென்ன?
நினைவுகளாய்
நித்தம் நித்தம்
பூப்பறக்கும் கனவுகள்...
0

ஏன்?

இரவினிலே உனைக் காணுகையில்
நிலவங்கே ஒழிந்திடுமே
நினைவுகளாய் வருகையிலே
நெஞ்சமெலாம் நிறைந்திடுமே
நான் என்னைப் பார்க்கையிலே
நீ மட்டும் தெரிவது ஏன்?
2

நீ

வார்த்தைகளைப் பயிரிட்டேன்
கவிதைகளாய் நீ முளைத்தாய்
வண்ணங்களைச் சிதறடித்தேன்
ஒவியமாய் நீ தெரிந்தாய்
கற்களைக் குடைந்து பார்த்தேன்
சிற்பமாய் நீயமைந்தாய்
கண்களால் காண்பவை எல்லாம்
இரவின் அழகாய் நீ இருந்தாய்
0

நட்பு

நட்பு என்னும் நறுமுகையின்
வாடைக் காற்று வீசுகையில்
மனமென்னும் ஓடையிலே
தத்தளிக்கும் படகினிலே
படர்நிலவாய் வந்தது என்ன?

நினைவுகள் தான்...
நான் பிரிய மனமில்லாமல்
சிறு நீரும் ஒழுக
பிரிந்து வந்த நட்பின்
நினைவுகள் தான்
அதை எங்கனம் மறவேன்
0

உன்னை எண்ணி

தோட்டத்தில் பூக்கள்
கண்டேன்
சிதறிக் கிடந்தன
ஒவ்வொன்றும்
ஒரு நிறம்...
என் நினைவுகளும்
அப்படித் தான்
எண்ணங்கள் வேறுபடும்
ஆனால் அனைத்தும்
உன்னை எண்ணி தானடி
0

பூக்கள் கூட்டம்

மஞ்சள் நிறப் பூக்கள் கூட்டம்
மனமகிழ்ந்து உனைக் காட்டும்
காரணம் கேட்டுக் காத்திருந்தேன்!
என்னவளை கண்டு அதன்
கண்கள் கொள்ளை போனதாம்
0

நீ செல்லும் பாதை...

நீ செல்லும் பாதை எங்கும்
என் நினைவுகள் என்னும்
பூ பூக்கும்
பூத்தப் பூக்கள் எலாம்
என் மனதோடு மழையாகும்
சிறு துளியும் தெரிப்பதில்லை
நினைவுகளை உணவாய்
ஏற்பதனால்...
0

இலைகள்

உன் விழிகளுக்குள்
மெளனமெனும்
மொழியதற்கு
உயிர் கொடுக்க
வரிகளாய் இளங்கொடி
படர்ந்திருக்க...

அன்பெனும் காற்றினிலே
வரிகள் முற்றியே
கவிதைகளாய் மாறிய
இலைகள் உதிர்த்திடவே
எனை வந்து சேர்கிறதே!

சேர்ந்தவை கூட்டமிட்டு
உயிர் பெற்று
மீண்டுமிங்கே படர்கிறதே!
இன்பங்கள் தெரிக்கிறதே...
0

பூ பூக்கும்...

கண்கள் கானும்
காட்சிகளெல்லாம்
கனவாகும் நிலை
எனினும்
நீ வந்து செல்லும்
நேரம் மட்டும்
என் மனதின்
நினைவுகளாய்
பூ பூக்கும்...
0

வரிகள்

காற்றின் அலையில்
உன் விழியின் வரிகள்
வெற்றிடத்தை நிரப்பும்.
என் வேதனையின்
துயர் நீக்க மயிலிறகின்
மென்மையாய்
என் மனதை வருடும்
நிந்தன் காற்றிடத்தே
அனுப்பிய வரிகள்!

கருமேகத் திரை

இமை எனும் இறையை
விழியாகி வணங்கவில்லை
ஏனெனில்
உன்னுடன் நானிருந்த
நாழிகையில்
சிறு கனம் விழியைத்
திரையிட்டு கருமேகக்
கனவாகியது
திரையிட்டது சிறுகனமே
எனினும்
நிலைகுலைந்து துகள்களானேன்

இரவில் மட்டும்
நான் வருந்தவில்லை
நீ என்னுடன் இல்லாமல்
இருப்பதாய் காட்டும்
வெள்ளித் திரையாய்
இமைகள்
கனவுகள் தருவதால் தான்
0

பஞ்ச வர்ண கனவுகள்

என் நெஞ்சில்
பஞ்ச வர்ண கனவுகள்
வண்ணத்துப் பூச்சிகள் கூட
இப்படி சிறகடித்துப் பார்த்ததில்லை
இன்பங்கள் இன்று
துளிர்விட்டுத் திரிகிறதே!
0

நகைக்கிறதே...

இளஞ் சூரியன்
எட்டிப் பார்க்கையிலே
ஒடும் நீர்க் கூட்டம்
முகம் சிவக்கிறது.

நீ எனைக் கடந்து
போகையிலே
என் நினைவுகள்
நகைக்கிறதே?

இரண்டாம் நிலவு

நட்சத்திரத்தை நான் பரித்து
உனக்குத் தர எண்ணியே
கார்முகிலை கடன் கேட்டேன்
முகிலினங்கள் தடுத்தது
நிலவின் அருகில் நிற்க
பயந்து தான் நான்
நட்சத்திரத்தை சிதறடித்தேன்
மீண்டும் அவைகளை
அருகில் கொண்டு செல்வது
முறையோ? தகுமோ?
0

நட்சத்திரம்

என் மனமெனும்
கார்முகிலின் நினைவுகள்
சுடர்விடும் நட்சத்திரம்
ஒவ்வொன்றும் உன்னுடன்
நானிருந்த நேரங்கள்
0

இளஞ் சூரியன்

ஆயிரம் ஆயிரம் கருநதி
உன் கரு நீளக் கருங்கூந்தல்
கலங்கமில்லா வெண்ணிலவு
நின் முகத்தின்
தடகத்தில் ஓர் அதிசய
பூ தான் நிந்தன்
செவ்விதழ் செந்தாமரையோ
பரந்து விரிந்த வானின்
இளஞ் சூரியன்
நின் நுதற் திலகமோ...
0

சிகரம்

மலைச் சிகர
உச்சிக் குளிர்மை
போல்
என் மனமும் சற்றே
அந்நிலை எய்தியது
அன்பெனும் பனிமழையை
நீ எந்தன் மனதோடு
பொழிந்ததனால்

மேலும் மேலும்
குளிர்கிறதே
நெஞ்சுக்குள்
பனிச் சிலையாய்
நீ இருப்பதனால்
0

கரு முத்து

கல்லாக அவன் படைத்தான்
உளியாகி என்னைச் செதுக்கினாய்
அன்பெனும் பேரமுதப் பொழிவை
ஒரு கனமும் நிறுத்தவில்லை
உன் விழிக்கூட்டின்
கரு முத்தாய் திரையிட்டு
எனைக் காத்தாய்
தாயே உனை எங்ஙனம்
நான் போற்ற?